• Sulaimaniya Teachers Conduct Online Classes for Students

          • Many teachers of Sulaimaniya college have started to conduct online classes for their students during this COVID-19 season. It is a great opportunity for teachers and students to move into a distance learning system using technology. This shows that remote learning is possible or it can be easily implemented in our school system and the country. More than 50 percent of the students had joined from each grade. External students also had joined for our school sessions.   

          • Science Experiment Video Making Competition | விஞ்ஞானப் பரிசோதனை காணொளி தயாரிக்கும் போட்டி

          • விஞ்ஞானம் சார்ந்த விடயங்களில் காணொளிகளை உருவாக்கி வெற்றி பெறுவோம்.

            மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் செயற்பாட்டுத் திறனை வளர்ப்பதற்கு சுலைமானியா விஞ்ஞானக் கழகத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.

            சுலைமானியா கல்லூரியில் தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற தகுதியுடையவளாவர்.

            ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

            சிறந்த காணொளிகள் விஞ்ஞானக் கழகத்தின் YouTube Channel இல் பதிவிடப்படும்.

            போட்டி நிபந்தனைகள்.

            ஒவ்வொரு தரமும் வெவ்வேறு பிரிவுகளாக கருதப்படும். அதாவது போட்டி 6 பிரிவுகளாக நடைபெறும்.

            போட்டி தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கும் ஆங்கில மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கும் பொதுவானதாகும்.

            மாணவர்கள் தாம் கற்கும் தரத்தில் விஞ்ஞான பாடத்தில் வரக்கூடிய செயற்பாடுகள் மற்றும் பரிசோதனைகளை மட்டுமே இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். தனது தரத்திற்கு புறம்பான விடயமொன்றை எடுத்துக்கொள்ள முடியாது. உதாரரணமாக தரம் 8 இல் உள்ள மாணவர் தரம் 7 விஞ்ஞான பாடத்தில் உள்ள விடயமொன்றை பயன்படுத்த முடியாது.

            போட்டியில் தனித்தே பங்குபற்ற முடியும்.

            விரும்பிய கருவியொன்றின் உதவியுடன் இவ் ஒளிப்பதிவை செய்ய முடியும்.

            வீடியோ காட்சி 15 நிமிடங்களை விட அதிகரிக்க முடியாது.

            வீடியோ காட்சியை தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

            விரும்பியவாறு Editing செய்ய முடியும்.

            மாணவர்களது சொந்தக் குரல் கொண்டு செயற்பாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

            மாணவர்களே செயற்பாடுகளையும் செய்து காட்ட வேண்டும். மாணவர்களின் முகம் தெரிய வேண்டிய அவசியமில்லை.

            வீடியோ காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கும் Editing செய்து கொள்வதற்கும் பெரியவர்களின்உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

            தமது வீட்டுச்சூழலிலேயே செயற்பாடுகளை செய்வது மிகப் பொருத்தமானதாகும். அதே போல இலகுவாக கிடைக்கின்ற பொருட்களை பொருட்களைஉபயோகிப்பது ஏற்றதாகும்.

            ஒரு மாணவர் எத்தனை காட்சிகளையும் போட்டிக்கு சமர்ப்பிக்கலாம்.

            மேலதிக விபரங்கள் தேவைப்படுமிடத்து நடுவர்கள் போட்டியாளர்களை தொடர்பு கொள்வார்கள்.

            நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

          • Sulaimaniya College calls A/L new admission application through online

          • 2022 உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம்

            கே/ தெஹி/ சுலைமானியா கல்லூரி - கன்னத்தோட்டை

            2019 க.பொ.த (சா/ த) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் பின்வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

            1. உயிரியல் விஞ்ஞானம்

            2. பௌதிக விஞ்ஞானம்

            3. வர்த்தகம்

            4. கலை

            5. உயிர் முறைகள் தொழில்நுட்பம்

            6. பொறியியல் தொழில்நுட்பம்

            www.tiny.cc/alapplication

            விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி : 31-May-2020

          • Smart Sulaimaniya Team Conducts live online classes for Teachers in Sri Lanka.

          • Sulaimaniya Smart School Team started to conduct online classes for teachers in Sri Lanka during this lockdown situation. Interested teachers were invited using an online form and added to the WhatsApp group. In the WhatsApp group, we shared the course information and details to join the sessions. There are more than 50 teachers had joined from different parts of Sri Lanka. Teachers actively participated and tried what they learned from our sessions. We covered many topics which are very useful in distance teaching and learning process.  

            சுலைமானியா Smart  School Team, ஆசிரியர்களுக்கு நடாத்திய ஒன்லைன் வகுப்பு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இவ் வகுப்புக்கள் ஏப்ரல் மாதம் 6 திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. மொத்தமாக 18 வகுப்புக்கள் பாடசாலை Smart Ambassador  ஆசிரியர்களால் ஒன்லைன் மூலமாக நடாத்தப்பட்டன. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் செயலிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. அண்ணளவாக 50 ஆசிரியர்கள் Smart  School  Team  உடன் இணைந்து இருந்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள்.இறுதி நாளில் பங்குபற்றியவர்களுக்கான ஒரு தேர்வும் நடைபெற்றது. தேர்வின் முடிவில் 70% வீதத்திற்கும் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 30 க்கு மேற்பட்டோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இறுதியில் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது.

          • Sulaimaniya Smart Media Club

          • சுலைமானியா Smart Media Club இல் இணைய விருப்பமான மாணவர்கள் www.tiny.cc/ssmc இணைப்பினூடாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவையுங்கள்.

          • Final Day of Astro Week 2020. Promoting STEM Education through Space Science

          • The Astro Week organised by Science Club of Sulaimaniya College to Promote STEM Education through space science concluded on 21st February 2020 with Campfire Night. There were many events in the final day of the event. The best three presentations selected from astronomy presentation event, the final of astronomy online Kahoot quiz competition, NASA Selfie photo shoot, debate, drama and virtual planetarium using AR & VR were some of the major events in the final day.

          • Astro Week Online Astronomy Quiz Competition - வானவியல் வார வினாடி வினாப் போட்டி

          • வானவியல் வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட Online  வினாடி வினாப்  போட்டி பெப்ரவரி மாதம் 18ம் திகதி பாடசாலை ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடைபெற்றது. இதில் பத்து குழுக்கள் பங்குபற்றி இருந்தன. அண்ணளவாக 100 மாணவர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். போட்டி 5 சுற்றுகளாக நடைபெற்றது. 5 சுற்றுகளிலும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தை பிடித்த அணிகள்  இறுதிப் போட்டிக்கு தகுதியினைப் பெற்றனர். அதனடிப்படையில் Helix , Orion  மற்றும் Saturn அணிகள் இறுதிப்  போட்டிக்கு தெரிவாகின. இறுதிப் போட்டி  வானவியல் வாரத்தின் இறுதிநாள் இரவில் நடைபெற்றது.