• ஆசிரியர் தின நிகழ்வுகள் - 2022

          • சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சுலைமானியா கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு, கடந்த 6ம் திகதி கலாசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

            தரம் 13 மாணவர்களின் ஏற்பாட்டின் கீழ் சக மாணவத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தது.

            ஆசிரியர்களின் உன்னத சேவையினை போற்றும் முகமாக சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 06 திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின் றது.

          • PTS பாட செயற்திட்டம் - நண்பர்களை உபசரிப்போம்

          • கடந்த வாரம் தரம் 7 மாணவர்களின் ' நண்பர்களை உபசரிப்போம்' நிகழ்வு நடைபெற்றது. தரம் 7J, 7L மற்றும் 7R மாணவர்கள் PTS பாட ஆசிரியை Mrs. Radheena அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

          • Children's Day Celebration - 2022 சிறுவர் தின கொண்டாட்டம் -2022

          • சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுகள், செப்டெம்பர், 30, 2022 அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

          • சுலைமானியாக் கல்லூரியின் ஆசிரியர் Fulbright Scholar ஆகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

          • சுலைமானியாக் கல்லூரியின் கணித ஆசிரியர் Ameer Mohamed Rajah ஐக்கிய அமெரிக்காவினால் நடாத்தப்படும் Fulbright Teaching Excellence Achievement புலமைப்பரிசிலுக்கு தெரிவுசெய்யப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார். அவர் தற்போது Georgia State பல்கலைக்கழகத்தில் ஆறு வார கால நவீன கற்றல் கற்பித்தல் துறையில் கல்வியை தொடர்ந்து வருகிறார்.

            Fulbright TEA நிகழ்ச்சித் திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 160 ஆசிரியர்களைத் தெரிவு செய்யது புதிய கற்பித்தல் முறைகள், மாணவர் மையக் கல்வி, பாடத் திட்டமிடல் மற்றும் ஆசிரியர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு கல்விக் கருத்தரங்குகளை வழங்குகிறது.

            இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் முழுமையான அனுசரணை வழங்குகின்றது.