• சுகாதாரமும் உடற்கல்வியும் பாட செயல் திட்டம்

          • கடந்த வாரம் தரம் 8R மாணவர்களின் "உணவின் போசனை தன்மையை பேணுவோம்"  என்ற பாடத்திற்கான உணவு தயாரிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மாணவர்கள் ஆரோக்கியமான, கவர்ச்சிகரமான உணவுகளை சுகாதாரமும் உடற்கல்வியும் பாட ஆசிரியை Mrs.Shaziliya அவர்களின் வழிகாட்டலின் கீழ் தயாரித்தனர்.

          • தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் - 2022

          • இவ்வருட தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முகமாக சுலைமானியா கல்லூரியில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒக்டோபர் முதல் வாரம் தொடக்கம் இறுதி வாரம் வரை இந்நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டன. இவற்றுள் வாசிப்பு முகாம், மாணவர் மன்றம் என்பன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை அழகிய முறையில் திட்டமிட்டு நடாத்திய நூலக பொறுப்பாசிரியை M.T.F Rismina, உட்பட வாசிப்பு மாத நிர்வாகக் குழு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள், மாணவர்த் தலைவர்கள் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

          • தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவான சுலைமானியாக் கல்லூரி மாணவியின் ஓவியம்

          • கல்வி அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியில் இவ்வருடம் எமது பாடசாலையின்  உயர்தரப் பிரிவு சார்பாக தரம் 12 கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவியான Mohamed Ashraff Fathima Shimla  மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இவர் 2022.11.06 ம் திகதி நடைபெறவுள்ள  தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
            குறித்த மாணவிக்கும் அமாணவிக்கு வழி காட்டிய சித்திரப் பாட ஆசிரியை H.C.F Shafra அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.