• Sulaimaniya College's Online Program Helps Grade 10 Students Choose the Right Career Path

          • Sulaimaniya College, Kannattota, recently organized an online program for grade 10 students aimed at guiding them in choosing the appropriate basket subjects after grade 9. Held on April 30th, 2023, the event featured Mr. M.J.M. Saneer, a social psychologist from the National Institute of Education Maharagama. Mr. Saneer utilized an online test to help identify students' career interests, ensuring they make informed choices for their future.


            Choosing the right basket subjects after grade 9 is important for students to pave the way for a successful career. Sulaimaniya College's online program aimed to support grade 10 students in making informed decisions aligned with their career aspirations and areas of interest. With the guidance of Mr. M.J.M. Saneer, a respected social psychologist, the program introduced students to various career options. Through an online test, students were able to discover their career interests, empowering them to choose the right basket subjects that align with their passions and talents.


            Mr. M.J.M. Saneer, a social psychologist from the National Institute of Education Maharagama, played a crucial role in the program. By utilizing an online test, he helped students identify their career interests, offering personalized guidance. Mr. Saneer shared his expertise and knowledge, guiding students in making informed decisions regarding their basket subject choices. Through his insights, students gained a deeper understanding of their aptitudes and preferences, allowing them to align their choices with their desired career paths.


            Participating in Sulaimaniya College's online program brought numerous benefits for grade 10 students. The program provided a platform for self-exploration, helping students understand their strengths, interests, and values. By utilizing the online test, students gained insights into their career preferences, paving the way for informed decision-making. By choosing the right basket subjects, students could set a strong foundation for their academic and professional journeys, aligned with their passions and aspirations.

          • தரம் 10, 11 மாணவர்களுக்கான விஞ்ஞான பரிசோதனை முகாம்

          • தரம் 10,11 மாணவர்களுக்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஞ்ஞான பரிசோதனை முகாமும் இனங்காணல் சோதனையும் கடந்த 08.02.2023 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வை விஞ்ஞான ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்ட்து.

          • School-Based Professional Teacher Development Workshop

          • 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை திட்டமிடலில் ஆசிரியர்களின் திட்டங்களை முறையாக செய்துகொள்வதற்காக பாடசாலை முகாமைத்துவக்குழு 2022 டிசம்பர் 24ம் திகதி அன்று செயலமர்வொன்றை பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்தது. இச்செயலமர்வுக்காக சபரகமுவ மாகாணத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் M.T.M Ansaf அவர்கள் வளவாளராக பங்கேற்று சிறப்பித்திருந்தார். 

          • சித்திரப் போட்டியில் சுலைமானியா மாணவிகள் வெற்றி

          • 2022ம் ஆண்டு துன்கோரளை அறிஞர் மன்றம் மற்றும் கரிடாஸ் இரத்தினபுரி செத்மினி நிறுவனத்தின் அனுசரணையுடன்  நடாத்தப்பட்ட, தெஹியோவிட்டை கல்வி வலய மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் உயர்தரப் பிரிவு சார்பாக பங்குபற்றிய கலைப் பிரிவு மாணவிகளான M.K.F Amna  மற்றும் M.A.F Adhila ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்.

          • சுகாதாரமும் உடற்கல்வியும் பாட செயல் திட்டம்

          • கடந்த வாரம் தரம் 8R மாணவர்களின் "உணவின் போசனை தன்மையை பேணுவோம்"  என்ற பாடத்திற்கான உணவு தயாரிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மாணவர்கள் ஆரோக்கியமான, கவர்ச்சிகரமான உணவுகளை சுகாதாரமும் உடற்கல்வியும் பாட ஆசிரியை Mrs.Shaziliya அவர்களின் வழிகாட்டலின் கீழ் தயாரித்தனர்.

          • தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் - 2022

          • இவ்வருட தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முகமாக சுலைமானியா கல்லூரியில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒக்டோபர் முதல் வாரம் தொடக்கம் இறுதி வாரம் வரை இந்நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டன. இவற்றுள் வாசிப்பு முகாம், மாணவர் மன்றம் என்பன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை அழகிய முறையில் திட்டமிட்டு நடாத்திய நூலக பொறுப்பாசிரியை M.T.F Rismina, உட்பட வாசிப்பு மாத நிர்வாகக் குழு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள், மாணவர்த் தலைவர்கள் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

          • தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவான சுலைமானியாக் கல்லூரி மாணவியின் ஓவியம்

          • கல்வி அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியில் இவ்வருடம் எமது பாடசாலையின்  உயர்தரப் பிரிவு சார்பாக தரம் 12 கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவியான Mohamed Ashraff Fathima Shimla  மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இவர் 2022.11.06 ம் திகதி நடைபெறவுள்ள  தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
            குறித்த மாணவிக்கும் அமாணவிக்கு வழி காட்டிய சித்திரப் பாட ஆசிரியை H.C.F Shafra அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

          • ஆசிரியர் தின நிகழ்வுகள் - 2022

          • சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சுலைமானியா கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு, கடந்த 6ம் திகதி கலாசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

            தரம் 13 மாணவர்களின் ஏற்பாட்டின் கீழ் சக மாணவத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தது.

            ஆசிரியர்களின் உன்னத சேவையினை போற்றும் முகமாக சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 06 திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின் றது.

          • PTS பாட செயற்திட்டம் - நண்பர்களை உபசரிப்போம்

          • கடந்த வாரம் தரம் 7 மாணவர்களின் ' நண்பர்களை உபசரிப்போம்' நிகழ்வு நடைபெற்றது. தரம் 7J, 7L மற்றும் 7R மாணவர்கள் PTS பாட ஆசிரியை Mrs. Radheena அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

          • Children's Day Celebration - 2022 சிறுவர் தின கொண்டாட்டம் -2022

          • சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுகள், செப்டெம்பர், 30, 2022 அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

          • சுலைமானியாக் கல்லூரியின் ஆசிரியர் Fulbright Scholar ஆகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

          • சுலைமானியாக் கல்லூரியின் கணித ஆசிரியர் Ameer Mohamed Rajah ஐக்கிய அமெரிக்காவினால் நடாத்தப்படும் Fulbright Teaching Excellence Achievement புலமைப்பரிசிலுக்கு தெரிவுசெய்யப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார். அவர் தற்போது Georgia State பல்கலைக்கழகத்தில் ஆறு வார கால நவீன கற்றல் கற்பித்தல் துறையில் கல்வியை தொடர்ந்து வருகிறார்.

            Fulbright TEA நிகழ்ச்சித் திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 160 ஆசிரியர்களைத் தெரிவு செய்யது புதிய கற்பித்தல் முறைகள், மாணவர் மையக் கல்வி, பாடத் திட்டமிடல் மற்றும் ஆசிரியர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு கல்விக் கருத்தரங்குகளை வழங்குகிறது.

            இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் முழுமையான அனுசரணை வழங்குகின்றது.

          • மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு - 2022

          • 2022ம் ஆண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 26 ஆகஸ்ட் 2022 அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட மாணவத் தலைவனாக A.M. ஹஸ்னி , சிரேஷ்ட மாணவத் தலைவியாக M.S.H.F. சுமையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.